உலகம்
கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான தகவல்
கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான தகவல்
கனடாவின் (Canada) வேலைவாய்ப்பு நிலைமை குறித்து அந்நாட்டு அரசு புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் கனடாவில் 15 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான தகவலை கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், வியாபாரம், கட்டுமானம் மற்றும் உதவி சேவைகள் துறைகளில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, நிதி காப்புறுதி, வீட்டுமனை, வாடகை மற்றும் குத்தகை போன்ற தொழில்துறைகளில் பின்னடைவு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் எண்ணிக்கையில் குறித்த துறைகளில் தொழில் வாய்ப்புகள் இலக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.