உலகம்
இனி பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்க கூடாது.., இந்திய மாநிலம் ஒன்றில் முடிவு
இனி பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்க கூடாது.., இந்திய மாநிலம் ஒன்றில் முடிவு
பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்கக் கூடாது என்று உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பெண்களுடைய பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன சேர்க்கலாம் என்று உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் உறுப்பினர்கள் விவாதம் செய்துள்ளனர்.
அப்போது, “பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்க கூடாது என்றும், ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும்” பரிந்துரைகள் செய்யப்பட்டன.
மேலும், பள்ளி பேருந்துகளிலும், துணி கடைகளிலும் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் கூறுகையில், “கூட்டத்தில் பேசப்பட்ட ஆலோசனைகள் அனைத்தும் தொடக்க கட்டத்தில் தான் உள்ளது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் ஒப்புதல் பெறப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். பின்னர், அதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன்