உலகம்

டிரம்பால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரி.! யார் இந்த சுசி வைல்ஸ்?

Published

on

டிரம்பால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரி.! யார் இந்த சுசி வைல்ஸ்?

டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் முதல் பெண் வெள்ளை மாளிகை தலைமைச் அதிகாரியாக சுசி வைல்ஸை (Susie Wiles) நியமித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பின்னர், டிரம்ப் எடுத்த முதல் முக்கிய முடிவு சுசி வில்ஸ் நியமிக்கப்பட்டதாகும்.

சுசி வில்ஸ் ஒரு முன்நிலை அரசியல் சிந்தனையாளர் ஆவார், மேலும் அவர் டிரம்ப்பின் முடிவுகளை சிறப்பாக நிர்வகிக்கக்கூடியவர் என பலரும் கருதுகின்றனர்.

2016 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் டிரம்பின் பிரச்சாரங்களை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார். இதன்மூலம் அவர் டிரம்பின் நெருங்கிய நபராகவும் மதிப்புமிக்க ஆலோசகராகவும் விளங்குகிறார்.

சுசி வில்ஸின் தந்தை புகழ்பெற்ற NFL விளம்பரத்தரகரான பட் சம்மரால் ஆவார். 1980ல் ரொனால்ட் ரீகனின் ஜனாதிபதி பிரச்சாரத்தில் பங்கேற்றதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். அதனுடன் ஃப்ளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட்டின் பிரச்சாரத்தையும் வெற்றிகரமாக கையாண்டார்.

“சூசி கடினமானவர், புத்திசாலி, புதுமையானவர், உலகளவில் போற்றப்படுகிறார் மற்றும் மதிக்கப்படுகிறார்” என்று டொனால்ட் டிரம்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version