உலகம்

ட்ரம்ப் அமைச்சரவையில் முக்கிய இடம்பிடிக்க இருக்கும் இந்திய வம்சாவளியினர்

Published

on

ட்ரம்ப் அமைச்சரவையில் முக்கிய இடம்பிடிக்க இருக்கும் இந்திய வம்சாவளியினர்

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அமைச்சரவை அமைக்கும்போது, அதில் சில இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய இடமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் யார் யார் என பார்க்கலாம்.

ட்ரம்ப் அமைச்சரவையில் முக்கிய இடம்பிடிக்க இருக்கும் இந்திய வம்சாவளியினர்

விவேக் ராமசாமி

விவேக் ராமசாமி (38), 2024 அமெரிக்க தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியவராவார். பின்னர் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு ட்ரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் துவங்கினார்.

ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது விவேக்கை ஸ்மார்ட் ஆனவர் என்றும், அவரால் அரசில் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றும் புகழ்ந்தார்.

ஆக, விவேக்குக்கு ட்ரம்ப் அமைச்சரவையில் முக்கிய இடம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஷ்யப் படேல்

ட்ரம்ப் ஆதரவாளரான கஷ்யப் காஷ் பட்டேலுக்கு CIAவில் முக்கிய பொறுப்பு வகிக்க ஆசை. முன்பு ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்கவில்லை.

ஆனால், இம்முறை கஷ்யப்புக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிக்கி ஹெய்லி

தென் கரோலினாவின் முன்னாள் ஆளுநரான நிக்கியும் விவேக்கைப் போலவே 2024 அமெரிக்க தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியவராவார். அவரும் பிறகு தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

ஷலாப் ஷாலி குமார்

ட்ரம்புக்கு குமார், 2024 அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்புக்கு ஆதரவாக கடுமையான பிரச்சாரம் செய்தவராவார்.

குமார், தேர்தல் பிரச்சாரத்துக்காக 1.2 மிலியன் டொலர்கள் செலவிட்டுள்ளார். இந்திய அமெரிக்கர்களிடையே அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தால், ஜனாதிபதியை முடிவு செய்யும் மாகாணங்கள் என அழைக்கப்படும் முக்கியமான மூன்று மாகாணங்களில் 200,000 வாக்காளர்கள் ட்ரம்புக்கு ஆதராவாக திரும்பியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

லூயிசியானா முன்னாள் ஆளுநரான பாபி, சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவருக்கு ட்ரம்ப் அமைச்சரவையில், சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறைகளில் முக்கிய பங்களிக்கப்படும் என கருதப்படுகிறது.

 

Exit mobile version