உலகம்
வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடு.., எங்கு தெரியுமா?
வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடு.., எங்கு தெரியுமா?
வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடு பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே ஒரு வீட்டை கட்டி முடிப்பது என்பது சாதாரண விடயம் அல்ல. வீடு கட்டுவதற்கு தகுந்த நேரத்தில் பணம் கிடைக்க வேண்டும்.
சிலருக்கு ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்கு ஒரு ஆண்டு ஆகலாம். சிலருக்கு 5 ஆண்டுகள் ஆகலாம்.
ஆனால், கோவா யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் வீடு ஒன்றை கட்டி முடிப்பதற்கு வெறும் 10 மணி நேரம் 30 நிமிடங்கள் தான் ஆகியுள்ளது.
கோவாவில் உள்ள பாம்போலிம் பகுதியில் இருக்கும் டாக்டர் ஷியாமளா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நேற்று ஒரு சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதாவது, ஒரு சுற்றுலா அமைப்பு, ஒரு கட்டுமான அமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகள் இணைந்து திறனான தொழிலாளர்களை நம்பியிருக்காமல் ஒரு சிறந்த முன்மாதிரியான வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
இதற்காக பலகைகள், கண்ணாடி கதவுகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. சுமார் 130 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
21 பேர் கொண்ட குழுவின் உதவியுடன் இந்த வீடானது 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்டது.
பணம் மற்றும் நேரத்தை மிச்சமாகும் இந்த கட்டுமானம் அதிக மக்களை கவரும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் கூறியுள்ளனர்.