உலகம்

தமிழ்நாட்டை தவிர அனைத்து இடங்களிலும் ட்ரம்ப் தான்.., வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

Published

on

தமிழ்நாட்டை தவிர அனைத்து இடங்களிலும் ட்ரம்ப் தான்.., வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்ற நிலையில் சுவாரஸ்யமான தகவல் வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் அமோகமாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள பலரும் கூகுளில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்பை தேடி வந்தனர். இதில் தான் ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது.

ஒக்டோபர் 31 -ம் திகதி முதல் நவம்பர் 6 -ம் திகதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் டொனால்டு டிரம்பை அதிகமானோர் கூகுளில் தேடியுள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அதிகமானோர் தேடியுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். அவர், தமிழ்நாடு மாவட்டமான திருவாரூர் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தைப் பூர்வீகமாக கொண்டவர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவரின் மகன் வழிப் பேத்தி தான் கமலா ஹாரீஸ்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் தோல்வியை தழுவியது வருத்தம் அளிப்பதாக துளசேந்திரபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தேர்தலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version