உலகம்

ட்ரம்பை வாழ்த்த மேக்ரான் பயன்படுத்திய வார்த்தை: கிழித்துத் தொங்கவிடும் நெட்டிசன்கள்

Published

on

ட்ரம்பை வாழ்த்த மேக்ரான் பயன்படுத்திய வார்த்தை: கிழித்துத் தொங்கவிடும் நெட்டிசன்கள்

ட்ரம்ப் தேர்தலில் முன்னிலை வகிக்கும்போதே உலகத் தலைவர்கள் சிலர் அவருக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பத் துவங்கிவிட்டார்கள்.

அவர்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் ஒருவர்.

ஆனால், தனது வாழ்த்துச் செய்தியில் மேக்ரான் பயன்படுத்திய வார்த்தை ஒன்றிற்காக அவரை பயங்கரமாக கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ட்ரம்பை வாழ்த்துவதற்காக சமூக ஊடகமான எக்ஸில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.

அதில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மரியாதையுடனும் லட்சியத்துடனும். கூடுதல் அமைதி மற்றும் செழிப்புக்காக உங்கள் மற்றும் என்னுடைய நம்பிக்கைகளுடன், முன்னர் நான்கு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றியதுபோல மீண்டும் பணியாற்ற நான் தயார் என குறிப்பிட்டிருந்தார் மேக்ரான்.

ஆனால், நம்பிக்கை என்ற வார்த்தைக்காக அவர் பயன்படுத்திய ஆங்கில வார்த்தை, conviction என்பது. இந்த conviction என்னும் வார்த்தைக்கு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுதல் என்ற பொருளும் உள்ளது.

2016ஆம் ஆண்டு, ட்ரம்புடன் தவறான உறவு வைத்திருந்ததாக தெரிவித்திருந்த மோசமான பெண்ணொருவருக்கு ட்ரம்ப் தரப்பில் பணம் கொடுக்கப்பட்ட வழக்கில், நியூயார்க் நீதிபதி ஒருவர், ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தார்.

ஆக, மேக்ரான் அதை வைத்து இப்போது ட்ரம்பை துணிச்சலாக ட்ரோல் செய்கிறாரா அல்லது அவரது வாழ்த்துச் செய்தி தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதா என சமூக ஊடகமான எக்ஸில் ஒருவர் கேள்வி எழுப்ப, இணையவாசிகள் மேக்ரானை கலாய்த்துத் தள்ளுகிறார்கள்!

Exit mobile version