உலகம்

அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேலால் இரகசியமாக நடத்தப்பட்ட கூட்டம்

Published

on

மத்திய கிழக்கின் பதற்றத்தின் தாக்கத்தினால் இஸ்ரேல் (Israel) தமது அமைச்சரவை கூட்டத்தை இரகசியமாக நடத்தியுள்ளதாக ஈரான் (Iran) தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்புகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

 

இஸ்ரேல் – ஈரான் நாடுகள் மோதல் தற்போது தீவிர நிலை கண்டுள்ளது.இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதல் திட்டங்களால் ஈரானின் அதிஉச்ச தலைவர் அயோதுல்லா கமேனி (Ayatollah Ali Khamenei) மிகுந்த பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடு மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல் பிரதமருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதன்படி, வழக்கமாக டெல் அவில் நகரிலுள்ள பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu )அலுவலகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் ,இரகசியமாக வேறு இடத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதற்காக, இஸ்ரேல் அமைச்சர்களுக்கு குருஞ்செய்திகள் வழியாக தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து அவருடைய இடத்திற்கு நயிம் காசீம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version