உலகம்

கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Published

on

கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவிலுள்ள (Canada) பிராம்ப்டன் நகரில் சர்வதேச மாணவர்கள் உடல் ரீதியான வன்முறைக்கும் மனிதக் கடத்தலுக்கும் உட்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இது தொடர்பில், பிராம்ப்டன் நகரின் மேயர் பாட்ரிக் பிரவுன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.

 

குறித்த குற்றச்செயல்கள் அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் தெரியப்படுமாறு நடக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

 

எனவே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விரைவில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

 

பிராம்ப்டன் நகரில், குறிப்பாக இளம்பெண் மாணவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்களே குறித்த வன்முறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் பல முறைகள் மாணவர்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அரசு அதிகாரிகளால் இந்த விடயயம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை எனவும் கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், பிராம்ப்டன் நகரிலுள்ள சர்வதேச மாணவர்கள் புலமைபரிசில்கள் மற்றும் குறைந்தளவு செலவிலான வசதிகள் மூலமாகவே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உள்வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version