உலகம்

புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை குறைக்கப்போகும் கனடா

Published

on

புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை குறைக்கப்போகும் கனடா

பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது ஆட்சியில் தொடர்ந்தும் இருக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனடா 2024இல் 485,000ஆக உள்ள நிரந்தர புலம்பெயர்வோர் எண்ணிக்கையை 2025இல் 395,000ஆக குறைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும், அந்த எண்ணிக்கை 2026இல் 380,000 ஆகவும் 2027இல் 365,000 ஆகவும் குறைக்கும் என்று அந்த நாட்டின் அரசாங்க தரப்பை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையில், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 2025இல் சுமார் 30,000ஆக குறைக்கப்பட்டு 300,000ஆக இருக்கும் என்றும் அந்த தரப்பு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version