உலகம்

ஒரே மாதத்தில் பல பில்லியன்களை கடனாக பெற்ற பிரித்தானிய அரசு

Published

on

பிரித்தானிய அரசு இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் 16.6 பில்லியன் பவுண்டுகள் (21.6 பில்லியன் டொலர்கள்) கடனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பிரித்தானியாவின் வரலாற்றில் மூன்றாவது பெரிய கடன் தொகை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பல்வேறு பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி பிரித்தானிய அரசு செப்டெம்பர் மாதத்தில் 17.5 பில்லியன் பவுண்டுகள் வரை கடன் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

செலவினங்களுக்கும் வரி வருவாய்க்கும் இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் இந்த கடன் தொகை பெறப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இதேவேளை, இந்த தொகை கடந்த வருடம் செப்டெம்பரில் பெறப்பட்ட தொகையை விட 2.1 பில்லியன் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version