உலகம்

இந்தியா குறித்து கடும் கண்டனம் வெளியிட்ட சீனா

Published

on

இந்தியா குறித்து கடும் கண்டனம் வெளியிட்ட சீனா

இந்தியா தாய்வானுடன் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது டெல்லி, சென்னையை தொடர்ந்து மும்பையிலும் தாய்வான் தூதரக அலுவலகத்தை திறந்துள்ள நிலையிலேயே குறித்த கண்டனத்தை தெரிவித்துள்ளது..

எனினும் சீனா, தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி தாய்வான் என உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பைத் தாய்வான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நியாங், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தாய்வானுடன் எந்தவொரு அதிகாரபூர்வ தொடர்புகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும்.

பீஜிங் உடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தாய்வானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவது கூடாது.

சீன – இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில், இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version