உலகம்

சங்காய் மாநாட்டை முன்னிட்டு பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

Published

on

சங்காய் மாநாட்டை முன்னிட்டு பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்கள் கூட்டத்துக்காக, சீனப் பிரதமர் லி கியாங் பாகிஸ்தானுக்கு வந்தடைந்த நிலையில், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பெரும்பாலும் நகரம் பூட்டப்பட்ட நிலையில் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், கடந்த 11 ஆண்டுகளில் சீனப் பிரதமர் ஒருவர், பாகிஸ்தானுக்குச் செல்வது இதுவே முதல் தடவையாகும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சங்காய் மாநாட்டை முன்னிட்டு பாகிஸ்தானிய அரசாங்கம் இஸ்லாமாபாத்தில் மூன்று நாள் பொது விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், பாடசலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

அதேநேரம், பெருமளவிலான பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் அண்மையில் இரண்டு சீன பொறியியலாளர்கள் கொல்லப்பட்டதோடு 21 சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, நாட்டில் சீன நாட்டவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தானின் கவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார இன்று தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா, ஈரான் மற்றும் ரஸ்யா உள்ளிட்ட ஒன்பது முழு உறுப்பினர்களை உள்ளடக்கிய 23ஆவது சங்காய் அமைப்பின் கூட்டம் இஸ்லாமாபாத்தில் செவ்வாய் (15) மற்றும் புதன்கிழமைகளில் (16) நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில், சீனா, ரஸ்யா, பெலாரஸ், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் மற்றும் ஈரானின் முதல் துணைத் தலைவர் ஆகியோரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும் பங்கேற்கவுள்ளனர்.

Exit mobile version