உலகம்

வறண்டுவரும் அமேசான், மிசிசிப்பி நதிகள்., கவலையளிக்கும் உண்மையை வெளியிட்ட ஐ.நா.

Published

on

வறண்டுவரும் அமேசான், மிசிசிப்பி நதிகள்., கவலையளிக்கும் உண்மையை வெளியிட்ட ஐ.நா.

உலக நீர் வளங்களின் தற்போதைய நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கவலையளிக்கும் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் உலகின் பெரும்பாலான உயிர்நாடிகளில் நீர் ஓட்டத்தின் அளவு பாரிய அளவில் சரிவைக் கண்டதாக அறிக்கை கூறியுள்ளது.

33 ஆண்டுகால தரவுகளை பகுப்பாய்வு செய்யும் “உலகளாவிய நீர் வளங்களின் நிலை” அறிக்கை, முக்கிய நதிப் படுகைகளில் நீடித்த வறட்சியின் கடுமையான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

உலகின் மிகப்பாரிய ஆறுகளான அமேசான் மற்றும் மிசிசிப்பி படுகைகளில் கடந்த ஆண்டு குறைந்த நீர் வரத்து இருந்தது.

இந்தியாவில் கங்கை மற்றும் மீகாங் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நீர் ஓட்டம் குறைவாக உள்ளது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் வழக்கத்திற்கு மாறான தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஆறுகளில் நீரோட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த நிலைமை விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் கிடைப்பதை குறைத்துள்ளது என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

Exit mobile version