உலகம்

கனடாவில் ஹொட்டல் சர்வர் வேலைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்திய இளைஞர்கள்

Published

on

கனடாவில் ஹொட்டல் சர்வர் வேலைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்திய இளைஞர்கள்

கனடாவில் ஹொட்டல் வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைகளுக்கு நீண்ட வரிசையில் இந்திய இளைஞர்கள் காத்திற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் பிராம்டனில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவு விடுதியில் வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, உணவு விடுதி முன்பு வேலைக்காக சுமார் 3000 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக, இந்த ஹொட்டல் வேலைக்காக இந்திய இளைஞர்கள் தான் பெரும்பாலானோர் வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைகளில் கனடாவில் வேலை பார்ப்பது இந்திய இளைஞர்களுக்கு பெரும் கனவாக இருந்துவரும் நிலையில் இச்சம்பவம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இதில் பயனர் ஒருவர், “கனடாவில் வேலையின்மை தீவிரமடைந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. அங்கு, வேலைக்கு செல்லும் இந்திய இளைஞர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பயனர் ஒருவர், “வெளிநாடுகளில் படிக்கும் இளைஞர்கள் தங்கள் செலவுக்காக பகுதி நேரமாக உணவு விடுதிகளில் வேலைக்குச் செல்வது வழக்கம்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version