உலகம்

கனடாவில் அதிகரித்த வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை… அரசு எடுத்த அதிரடி முடிவு!

Published

on

கனடாவில் இந்திய மாணவர்கள் உட்பட பல வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படித்து வருவதாகவும், பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கனேடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version