உலகம்

புதிய வகை கொரோனா தொற்று: இதுவரை 27 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்

Published

on

புதிய வகை கொரோனா தொற்று: இதுவரை 27 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்

எக்ஸ்.ஈ.சீ ( XEC) எனப்படும் புதிய கொரோனா வைரஸ் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது கொரோனா நோயின் மாறுபாடு எனவும், விரைவில் பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புதிய திரிபு முதன்முதலில் ஜெர்மனியில் (Germany) ஜூன் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இங்கிலாந்து (England), அமெரிக்கா (United States), டென்மார்க் மற்றும் பல நாடுகளுக்கு பரவியது, இதுவரை போலந்து, நோர்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்த்துகல், சீனா (China) உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இதே புதிய ரகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த கொரோனா XEC ஆனது ஓமிக்ரோன் மாறுபாட்டின் மற்றொரு துணையை உருவாக்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொற்றினால் பாதிக்கபடும் பெரும்பாலான மக்கள் சில வாரங்களுக்குள் குணமடைவார்கள், சிலருக்கு குணமடைய அதிக நேரம் ஆகலாம், மேலும் சிலர் வைத்தியசாலையில் சேர்க்க வேண்டியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர் காலத்தில் வேகமாகப் பரவத் தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்தத் திரிபால் மனிதர்களுக்குத் தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version