உலகம்
அமெரிக்க தேர்தல் பிரசாரக் களம் : விவாதத்துக்கு உள்ளாகிய கமலா ஹாரிசின் காதணிகள்
அமெரிக்க தேர்தல் பிரசாரக் களம் : விவாதத்துக்கு உள்ளாகிய கமலா ஹாரிசின் காதணிகள்
அமெரிக்க தேர்தல் பிரசாரக் களத்தில் ஏனைய விடயங்களை காட்டிலும் தற்போது, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala Harris), அணிந்திருக்கும் காதணிகள் குறித்தே விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
நேற்று முன்தினம், கமலா ஹாரிசுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பிற்க்கும் (Donald Trump) இடையில் முதலாவது கொள்கை விவாதம் இடம்பெற்றது
இந்த விவாதத்தில், கமலா ஹாரிஸ் முன்னிலைப் பெற்றதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விவாதத்தின் போது, கமலா ஹாரிஸ் அணிந்திருந்த காதணிகள், வயர் தொடர்பற்ற இயர்போன் என்ற தொடர்பாடல் கருவியாகும் என்றும் ட்ரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் விவாதத்தின் போது அவருக்கு வெளியில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்பதே ட்ரம்ப் தரப்பின் வாதமாக உள்ளது.
எனினும் கமலா ஹாரிஸ், வழமையாக அணியும் காதணிகளையே விவாத வேளையிலும் அணிந்திருந்தார் என்றுஅவரின் தரப்பு தெரிவித்துள்ளது.