உலகம்

புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பேன்: பிரான்ஸ் புதிய பிரதமர் உறுதி

Published

on

புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பேன்: பிரான்ஸ் புதிய பிரதமர் உறுதி

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, மிஷல் பார்னியேர் (Michel Barnier) என்பவரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கைப்பாவையாக இல்லாமல் சுயமுடிவுகள் எடுப்பேன் என்றும், அதே நேரத்தில், ஜனாதிபதியின் சில முக்கிய கொள்கைகளைப் பின்பற்றுவேன் என்றும் கூறியுள்ளார் பார்னியேர்.

பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் முதல் பேட்டியளித்த பார்னியேர், முதலாவதாக தெரிவித்துள்ள விடயமே புலம்பெயர்தல் குறித்ததுதான்.

புலம்பெயர்தல் தொடர்பில் கடுமையான கொள்கைகளைப் பின்பற்ற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் எல்லைகள் சல்லடை போல உள்ளன என்று கூறியுள்ள பார்னியேர், அவற்றின் வழியாக நாட்டுக்குள் புலம்பெயர்தல் கட்டுப்பாடில்லாமல் இருப்பதுபோல உள்ளதாகவும் தான் உணர்வதாக தெரிவித்தார்.

தனக்கு National Rally கட்சியுடன் ஒத்த கொள்கைகள் அதிகம் இல்லை என்றாலும், அவற்றை தான் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார் பார்னியேர்.

National Rally கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version