உலகம்

சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி புடின் மங்கோலியா பயணம்

Published

on

சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி புடின் மங்கோலியா பயணம்

ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நீடித்து வருகின்ற நிலையில் இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் புடின் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றி உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புடின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புதினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று(03) மங்கோலியா சென்றுள்ளார். மங்கோலியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உறுப்பினராக உள்ள நிலையில் புடினின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மங்கோலியா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடினை அந்நாட்டு ஜனாதிபதி உக்னங்இன் குர்ரில்சுக் நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Exit mobile version