உலகம்

சுவிட்சர்லாந்தில் அதிக சம்பளம் பெறுவோர் தொடர்பில் வெளியான தகவல்

Published

on

சுவிட்சர்லாந்தில் அதிக சம்பளம் பெறுவோர் தொடர்பில் வெளியான தகவல்

சுவிட்சர்லாந்தில், சுவிஸ் குடிமக்களைவிட சில வெளிநாட்டவர்கள் அதிக சம்பளம் பெறுவதாக அந்நாட்டு பெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், சுவிட்சர்லாந்தில் உயர்நிலை மட்டத்தில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு, சுவிஸ் குடிமக்களை விட அதிக சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வேலை செய்யும் சுவிஸ் நாட்டவர்களுக்கு சராசரியாக 129,100 சுவிஸ் ஃப்ராங்குகள் சம்பளம் வழங்கப்படும் நிலையில், அதே பணி செய்யும் வெளிநாட்டவர்களுக்கு சராசரியாக 130,000 சுவிஸ் ஃப்ராங்குகள் சம்பளம் வழங்கப்படுவதாக பெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி, பகுதி நேரப் பணி செய்வோருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும், சில துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதே, சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட காரணம் என பெடரல் புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

Exit mobile version