உலகம்

பெண்களுக்கு எதிராக தாலிபான்களின் புதிய சட்டம்

Published

on

பெண்களுக்கு எதிராக தாலிபான்களின் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) பெண்கள் பொது இடங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தாலிபான் (Taliban) அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பெண்களின் குரல்களால் ஆண்களின் மனம் திசைதிருப்பப்படலாம் என்பதால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தாலிபான் அமைப்பு கூறியுள்ளது.

அத்துடன், பொது இடங்களில் எப்போதும் தடிமனான துணியால் தங்கள் உடல் மற்றும் முகத்தை மறைக்கவும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பெண்கள் வீட்டில் சத்தமாக பாடவும், படிக்கவும் தாலிபான்கள் தடை விதித்திருந்தனர். இவ்வாறான சட்டங்களை மீறும் பெண்கள் அல்லது சிறுமிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

இதேவேளை, ஆண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, முழங்கால் வரை தங்கள் உடலை மறைக்க வேண்டும் எனவும் தாலிபான்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், உயிருடன் இருக்கும் எந்தவொரு நபரையும் புகைப்படம் எடுக்கவும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

 

Exit mobile version