உலகம்

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஹரி பிரிய காரணமாய் அமைந்த தொலைபேசி அழைப்பு

Published

on

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஹரி பிரிய காரணமாய் அமைந்த தொலைபேசி அழைப்பு

இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன் ராஜ குடும்பத்துக்குள் வந்த நாள் முதலே அவருக்கு ராஜ குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இருப்பினும், மேகன் தொடர்பில், இளவரசர் வில்லியம் ஹரிக்கிடையிலான ஒரு தொலைபேசி அழைப்பு இரு குடும்பங்களையும் பிரித்ததாகத் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்புக்குப் பின், இளவரசர் வில்லியம், தன் குடும்பத்தினரை இளவரசர் ஹரி குடும்பத்தினரிடம் இருந்து பிரித்துவிட்டதாக, ராபர்ட் லேசி (Robert Lacey) என்பவர் எழுதிய, Battle of the Brothers என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் தம்பி ஹரியை அழைத்த வில்லியம், மேகன், ராஜ குடும்பத்தின் மீது வெறுப்பு வைத்துள்ளதாகவும், ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கே திரும்பிவிட ஆரம்பம் முதலே அவர் திட்டம் வைத்திருக்கக்கூடும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

தன் மனைவியைக் குறித்து அண்ணன் வில்லியம் கூறியதைக் கேட்டு கோபத்தில் ஹரி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட, அதன் பிறகு வில்லியம் தன் குடும்பத்தினரை இளவரசர் ஹரி குடும்பத்தினரிடம் இருந்து பிரித்துவிட்டதாக ராபர்ட் தனது புத்தகத்தில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version