உலகம்
இரு நாடுகளுக்கான விமான சேவைகளின் இடைநிறுத்ததை நீடித்த ஜேர்மன்
இரு நாடுகளுக்கான விமான சேவைகளின் இடைநிறுத்ததை நீடித்த ஜேர்மன்
டெஹ்ரான் (Tehran) மற்றும் டெல் அவிவ் (Tel Aviv) ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமான சேவைகளின் இடைநிறுத்தத்தை நீடிக்கவுள்ளதாக ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) அறிவித்துள்ளது.
அந்தவகையில், பாதுகாப்புக் காரணங்களை கருத்திற்கொண்டு குறித்த இடைநிறுத்தத்ததை எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.
குறித்த விமான நிலையத்திலிருந்து லெபனானின் தலைநகரான பெய்ரூட்டிற்கு செல்லும் விமானங்கள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டிருந்துது.
இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் நிறுத்தப்பட்ட ஜோர்தானின் தலைநகரான அம்மான் மற்றும் ஈராக் நகரமான எர்பில் ஆகிய இடங்களுக்கான விமானங்கள் ஓகஸ்ட் 27 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று லுஃப்தான்சா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்கா (USA), கத்தார் மற்றும் எகிப்து (Egypt) ஆகிய மத்தியஸ்தர்கள் இராஜதந்திர முயற்சிகள் இஸ்ரேலையும் (Israel) ஹமாஸையும் காசாவில் போர்நிறுத்தம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதட்டங்களைத் நிறுத்துவதே இந்த முயற்சிகளின் குறிக்கோள் என லுஃப்தான்சா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.