உலகம்

ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ஏவுகணைகள்

Published

on

ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ஏவுகணைகள்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பொறியியல் உபகரணங்களை அழிப்பதற்காக உக்ரேனியப் படைகள் அமெரிக்கா தயாரித்த HIMARS ஏவுகணைகளை பயன்படுத்துவதாக அந்நாட்டு இராணுவம் கூறுகிறது.

உக்ரேனிய இராணுவம் வெளியிட்ட சிறப்பு டெலிகிராம் பதிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 6 ஆம் திகதி 28-35 கிலோமீட்டர்கள் வரை முன்னேறி மேற்கு ரஷ்யாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்தியதில் இருந்து, உக்ரைன் தமது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் உக்ரைன் மீது ரஷ்யா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

எனினும் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக அந்த நாடு நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை,

அதே நேரத்தில் அதன் கொள்கைகள் மாறவில்லை என்றும், ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து உக்ரைன் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version