உலகம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Published

on

அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அமெரிக்க குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தொடங்கியுள்ளார்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்து நீண்ட காலமாக குடியுரிமைக்காக காத்திருப்பவர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நவம்பர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக புதிய குடிவரவு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த திட்டம் சட்டவிரோதமானது என்று குடியரசு கட்சி கூறுகிறது.

ஜூன் மாதம் அமெரிக்க அரசாங்கம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 500,000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்கள் வெளிநாட்டு புலம்பெயர்ந்தோர் என கண்டறியப்பட்டுள்ளது.

ஜூன் 17 நிலவரப்படி, அவர்கள் குறைந்தது 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற பெற்றோருடன் வசிக்கும் 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இச்சட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமையைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version