உலகம்

பங்களாதேஷில் வெடித்த பாரிய போராட்டத்தால் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு

Published

on

பங்களாதேஷில் வெடித்த பாரிய போராட்டத்தால் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பு

பங்களாதேஷில்(Bangladesh) 30 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் வெடித்த நிலையில் நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்ததால் கடந்த மாதம் 17 ஆம் திகதி அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்து போராட்டத்தை போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் கடந்த 5 ஆம் திகதி ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாட்டில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பியதோடு, பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க இடைக்கால அரசு முடிவு செய்தது.

அதன்படி 18ஆம் திகதி முதல் கல்வி நிறுவனங்களை திறக்குமாறு கடந்த 15 ஆம் திகதி கல்வி அமைச்சகம் உத்தரவிட்டதோடு, ஒரு மாதத்துக்குப்பிறகு நாடு முழுவதும் நேற்று பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

Exit mobile version