இலங்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : கனடாவின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை

Published

on

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பு : கனடாவின் தீர்மானத்தை வரவேற்கும் இலங்கை

உலகத் தமிழர் இயக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பயங்கரவாத அமைப்புகளாக தக்கவைத்துக்கொள்ளும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் வலையமைப்பு, சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல்களை கொண்டிருப்பதாக கனடா கூறியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைளுக்காக, அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதற்கு WTM என்ற உலக தமிழர் இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக கனடாவின் மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.

இந்தநிலையில், கடுமையான மீளாய்வு செயல்முறையைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, குறித்த அமைப்புகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் தொடர்வதை உறுதிப்படுத்துகிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது.

அத்துடன் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது சட்டப்பூர்வமான தேவையாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி அண்மைய மதிப்பாய்வு செயல்முறை 2024 ஜூனில் நிறைவடைந்ததாக இலங்கை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version