உலகம்

வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு.., மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

Published

on

வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு.., மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

கேரளா வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த கடந்த 30 ஆம் திகதி செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கற்பனையில் கூட நினைத்து பார்க்கமுடியாத வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதிகளில் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நிலச்சரிவை தொடர்ந்து வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வயநாட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை கேரளா மூணாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய பாறைகள் உருண்டு விழுந்தத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Exit mobile version