உலகம்

பிரித்தானியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

Published

on

பிரித்தானியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க பிரித்தானியாவில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் சமீப நாட்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்தே, பல எண்ணிக்கையிலான நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அது கலவரமாக வெடித்துள்ளது. இதுவரை சுமார் 400 பேர்கள் கைதாகியுள்ளனர்.

மேலும் கைது நடவடிக்கை தொடரும் என்றே அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிறது. மட்டுமின்றி, புதன்கிழமை 39 பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று வலதுசாரிகள் அமைப்பு ஒன்று தங்கலின் ஆதரவாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலவரம் அல்லது ஆர்ப்பாட்டம் நடக்கும் பகுதிகளை ஐக்கிய அமீரக மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், மக்கள் கூடும் பகுதிகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என கோரியுள்ளது.

மேலும், லண்டனில் உள்ள ஐக்கிய அமீரக தூதரகம் வெளியிடும் எச்சரிக்கைகளை பின்பற்றவும், ஐக்கிய அமீரக தூதரகங்கள் வெளியிடும் அறிக்கைகளை கவனத்தில் கொள்ளவும் வெளிவிவகார அமைச்சரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சில நூறு மக்கள் திரண்டு பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிசார் மீது கற்களை வீசுவதும், கடைகளை சூறையாடுவதும் மசூதிகள் மற்றும் ஆசிய நாட்டவர்களின் வணிக ஸ்தாபனங்களை சேதப்படுத்துவதுமாக வன்முறை நீடித்து வருகிறது.

வாகனங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்துடன், உறுதி செய்யப்படாத சில சமூக ஊடக காணொளிகளில் சிறுபான்மை இன மக்கள் தாக்கப்படுவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Exit mobile version