உலகம்
கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை
இஸ்ரேலுக்கான அனைத்து வகையான பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடிய(Canada) பிரஜைகளுக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நிச்சயமற்ற பாதுகாப்பு நிலமைகளின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேல், மேற்குக்கரை மற்றும் காசா பரப்பில் வசித்து வரும் கனேடியர்கள் தங்களது பயண ஆவணங்களை ஆயத்த நிலையில் வைத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
மேலும், கனேடிய பிரஜைகள் மற்றும் கனேடிய நிரந்தர வதிவுரிமையாளர்கள் எந்த நேரத்திலும் அவசரமாக வெளியேறுவதற்கு ஆயத்த நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.