உலகம்
இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்
இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்
இஸ்ரேலில்(Israel) ஹோலன் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று(04) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே அவர் பலியானதோடு, 3 பேர் காயம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு கரையை சேர்ந்த பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பொலிஸார் அந்நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், அந்நபரின் நிலைமை உடனடியாக தெரிய வரவில்லை.
மேலும், தாக்குதலில் காயமடைந்த நபர்களில் இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில், காயமடைந்த 3 பேரும் வெவ்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.