உலகம்

காசா மீது இஸ்ரேல் நடத்திய திடீர் வான் தாக்குதலில் இரண்டு செய்தியாளர்கள் பலி

Published

on

காசா மீது இஸ்ரேல் நடத்திய திடீர் வான் தாக்குதலில் இரண்டு செய்தியாளர்கள் பலி

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு அல் ஜசீரா (Al Jazeera) செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் அல் ஜசீரா வின் செய்தியாளர்களான இஸ்மாயில் அல் கோல் மற்றும் கேமராமேன் ரமி அல் ரெஃபீ ஆகிய இருவருமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே(Ismail Haniyeh)வின் வீட்டிற்கு அருகே செய்தி சேகரிக்க பணியமர்த்தப்பட்டிருந்தனர் என சக ஊழியரான அனஸ் அல் ஷெரீப் கருத்துப்படி தெரியவந்துள்ளது.

மேலும், இருவரும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே-யின் பிறந்த இடமான ஷாதி நகர்புற அகதிகள் முகாமில் செய்தி சேகரித்து கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்கள் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் எத்தகைய பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில் காரில் சென்று கொண்டு இருந்த போது காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version