உலகம்

வெளிநாடொன்றில் மூடப்பட்ட 4,000 வழிபாட்டுத் தலங்கள்

Published

on

வெளிநாடொன்றில் மூடப்பட்ட 4,000 வழிபாட்டுத் தலங்கள்

ருவாண்டாவில்(Rwanda) 4,000க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதத்தில் ருவாண்டாவில் 4,000க்கும் அதிகமான வழிபாட்டுத் தளங்கள், குறிப்பாக சிறிய பெந்தெகோஸ்தே தேவாலயங்கள் மற்றும் சில பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது, குறிப்பாக போதுமான ஒலி புகார் அமைப்பு இல்லாதது போன்ற காரணங்களைக் காட்டி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த வழிபாட்டுத் தளங்கள் பல குகைகள், ஆறுகளின் கரைகள் போன்ற சாதாரண மற்ற இடங்களில் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் வழிபாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதே தங்களின் நோக்கம் என்றும், மதச் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் வழிபாட்டுத் தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 2018இல் இயற்றப்பட்ட சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இதில் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடுகள், பாதுகாப்பான சூழல் மற்றும் சத்தங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்த சட்டத்தில் உள்ளன. 2018-ல் நடந்த முந்தைய நடவடிக்கையில் சுமார் 700 தேவாலயங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version