உலகம்

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

Published

on

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

வடகொரியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

சீன எல்லை நகரங்களான Sinuiju மற்றும் Uiju ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Uiju மாவட்டத்தில் சுமார் 4000 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக வடகொரிய அரச ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.

சுமார் 3000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஜனாதிபதி கிம் ஜொங் உன் (Kim Jong Un) நேரடியாக களத்தில் இறங்கி வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். அவர் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படகு மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை மதிப்பீடு செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வெள்ளத்தைத் தொடர்ந்து, தலைவர் கிம் ஜாங் உன் நாட்டில் அவசர நிலையை அறிவித்தார்.

Exit mobile version