உலகம்

ஜஸ்டின் ட்ரூடோவின் இடத்தைப் பிடிக்கப்போவது யார்? கனேடிய ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்

Published

on

ஜஸ்டின் ட்ரூடோவின் இடத்தைப் பிடிக்கப்போவது யார்? கனேடிய ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகிவிட்டார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவும் அதேபோல விலகுவாரா என ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஜஸ்டின் ட்ரூடோவின் இடத்தைப் பிடிக்கப்போவது யார், மார்க் கார்னியா, கிறிஸ்டியா ஃப்ரீலேண்டா அல்லது டொமினிக் லி ப்ளாங்கா என கேள்வி எழுப்பியுள்ளன கனேடிய ஊடகங்கள்.

அமெரிக்காவில் ஜோ பைடன் விலகக் காரணமாக அமைந்தது அவரது வயது. ஆனால், ட்ரூடோவுக்கு அப்படியல்ல.

ட்ரூடோ தலைவராக இருந்தால் அடுத்த தேர்தலில் அவர் சார்ந்த லேபர் கட்சி வெற்றி பெறுவது கடினம் என அவரது கட்சியினரே கூறுகிறார்கள்.

ஆகவே, அவர் ராஜினாமா செய்யவேண்டும் என அவரது கட்சியைச் சேர்ந்தவரான Wayne Long என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்பாக, லேபர் கட்சியின் கோட்டையான ரொரன்றோவின் St. Paul’s தொகுதியில் அக்கட்சி படுதோல்வி அடைந்த விடயம், மக்கள் ட்ரூடோ கட்சியை ஆதரிக்க விரும்பவில்லை என காட்டியுள்ளது.

ஆக, ட்ரூடோ பிரதமராக நீடித்தாரென்றால், அடுத்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெறாது என்ற கருத்து கட்சியினரிடையே உருவாகியுள்ளது.

ஆக, இது வெறும் ஒரு தொகுதியின் தோல்வியா அல்லது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, நாடு முழுவதும் இந்த நிலைதான் காணப்படுகிறது என்று காட்டும் கண்ணாடியா என்பது தெரியவில்லை.

ஜோ பைடனைப்போல ஜஸ்டின் ட்ரூடோவும் விலகவேண்டி வருமா? காலம்தான் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும்!

Exit mobile version