உலகம்

பூமியின் நீர் பகுதியில் வேகமாக குறைந்து வரும் ஒட்சிசன் – அடுத்து நடக்கப்போவது என்ன?

Published

on

பூமியின் நீர் பகுதியில் வேகமாக குறைந்து வரும் ஒட்சிசன் – அடுத்து நடக்கப்போவது என்ன?

உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஒட்சிசனின் விநியோகம் வேகமாக குறைந்து வருவதாகவும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வளிமண்டலத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இன்றியமையாத ஒன்றாக ஒட்சிசன் இருக்கிறது. அதுப்போலவே தண்ணீரில் கரைந்த ஆக்ஸிஜன் (DO) ஆரோக்கியமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உதவுகிறது.

பில்லியன் கணக்கான மக்கள் உணவு மற்றும் வருமானத்திற்காக கடல் மற்றும் நன்னீர் வாழ்விடங்களை நம்பியிருப்பதால், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்சிசன் வேகமாக குறைந்து வருகிறது.

இவ்வாறு கடல் பரப்புகளில் ஒட்சிசன் குறைந்து வருவதால் கடல் உயிரிகள் வேகமாக அழிந்து விடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான 70% ஒட்சிசன் கடல் பகுதியில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு கடல் பரப்புகளில் இருந்து ஒட்சிசன் குறைந்து வருவது மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறும் என ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version