உலகம்

இராட்சத பலூன்கள் மூலம் தென் கொரியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் வட கொரியா

Published

on

இராட்சத பலூன்கள் மூலம் தென் கொரியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் வட கொரியா

தென் கொரியாவின்(South Korea) சியோல் நகரத்திற்கு வடக்கே, வட கொரியா அனுப்பிய இராட்சத பலூன்கள் பறந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும், இது தென்கொரிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பலூன்களில் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என தென் கொரிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அமெரிக்காவுடன் இணைந்து அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.

இதனிடையே சமீப காலமாக வட கொரியா ஏராளமான இராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வருகிறது. அந்த பலூன்களில் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தென்கொரியா பகுதிகளுக்குள் இதுபோன்ற ஏராளமான குப்பைகளை கொண்ட பலூன்கள் பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version