உலகம்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: களம் காணும் தமிழக வீரர்கள் யார் யார் தெரியுமா?

Published

on

பாரிஸ் ஒலிம்பிக் 2024: களம் காணும் தமிழக வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் ஆரம்பமாகவிருக்கிறது.

உலகளாவிய நிகழ்வு ஜூலை 26 முதல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்சின் தலைநகரில் (பாரிஸ்) நடைபெறும்.

2021 இல் இந்தியா மிகவும் வெற்றிகரமான டோக்கியோ 2020 ஒலிம்பிக்கைச் சந்தித்தது.

சாதனையாக 7 பதக்கங்கள் வென்றவர்கள் இருந்தனர், நீரஜ் சோப்ரா ஆண்கள் ஈட்டி எறிதல் நிகழ்வில் தங்கப் பதக்கத்தை பெற்றார்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் 117 வீரர் – வீராங்கனைகள் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் கவுன்சில் அறிவுறுத்துள்ளது.

தகுதிச் சுற்று மற்றும் தரவரிசை அடிப்படையில் வீரர்-வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.

47 இந்திய வீராங்கனைகள் பதக்கம் வெல்வதற்காக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளனர்.

அதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் யார் என குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வித்யா ராம்ராஜ் கோவை மாவட்டத்தை சேர்ந்த லோறி ஓட்டநரின் மகள். இவர் 100.மீ, 400.மீ, 400.மீ தடை தாண்டும் ஓட்டம், 4*400 ரிலே, கலப்பு 4*400 ரிலே ஓட்டத்தில் திறமையானவர். 2023 ஆம் ஆண்டில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 4*400 ரிலே ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

சுபா வெங்டேசன் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான் பெண். இவர் 2023ல் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் கலப்பு 4*400 ரிலே ஓட்டத்திலும், மகளிர் 4*400 ரிலே ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார். வருகிற பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 4*400 ரிலே ஒட்டத்தில் இவர் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் பிறந்த இளவேனில் வாலறிவன் பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்கவுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இவர் பங்கேற்றுள்ளமையால் இம்முறை நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version