உலகம்

ட்ரம்பை கொலை செய்ய முயன்ற நபர் தொடர்பில் FBI வெளியிட்ட தகவல்

Published

on

ட்ரம்பை கொலை செய்ய முயன்ற நபர் தொடர்பில் FBI வெளியிட்ட தகவல்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) படுகொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பிலும் விரிவாக ஆய்வு செய்துள்ளதாக FBI அதிகாரிகள் பகீர் தகவல் ஒன்றை விசாரணையின் மூலம் அம்பலமாக்கியுள்ளனர்.

அரச குடும்பத்து உறுப்பினர் டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயன்ற 20 வயதான தாமஸ் க்ரூக்ஸ், இணையத்தில் தமது இலக்கு தொடர்பில் விரிவாக ஆய்வு செய்துள்ளதோடு, இது குறித்து பல்வேறு தரவுகளை அவர் இணையத்தில் தேடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாமஸ் க்ரூக்ஸ் பயன்படுத்தியுள்ள தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களை ஆய்வுக்கு உட்படுத்திய FBI அதிகாரிகள் பெயர் குறிப்பிடாத பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர் குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளமையை கண்டு பிடித்துள்ளனர்.

மேலும் இவர் டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும், சிகாகோவில் நடக்கவிருக்கும் ஜனநாயக தேசிய மாநாட்டிற்கான முக்கிய திகதிகள் உள்ளிட்ட தரவுகளையும் பதிவு செய்து வைத்திருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று ட்ரம்ப் மேடையேறும் ஒருமணி நேரத்திற்கு முன்னர், சந்தேகத்திற்கு இடமளிக்கும் நடமாட்டம் தொடர்பில் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version