உலகம்

கனேடிய மாகாணமொன்றில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை

Published

on

கனேடிய மாகாணமொன்றில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை

கனடாவின்(Canada) பிரின்ஸ் ஆப் எட்வெர்ட் தீவு (Prince Edward Island) பகுதியில் மாணவர்கள் வகுப்பறையில் தொலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரின்ஸ் ஆப் எட்வர்ட் மாகாண அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

குறித்த தடையானது எதிர்வரும் ஆண்டில் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தரம் 7 முதல் 12 வரையிலான மாணவர்கள் கல்வியியல் நோக்கத்திற்காக தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள், அனுமதி வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசியை கொண்டு முன்னெடுக்கப்படும் மோசமான நடவடிக்கைகளை தடுப்பதற்கே இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், விசேட தேவையுடைய மற்றும் மருத்துவ தேவையுடைய மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியூ பிரவுன்ஸ்விக், நோவா ஸ்கோசியா போன்ற பகுதிகளில் அலைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version