உலகம்

வரலாற்றில் முதன்முறையாக கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் படிமம்

Published

on

வரலாற்றில் முதன்முறையாக கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் படிமம்

வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான டைனோசர் படிமம் நியூயோர்க்கில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

அபெக்ஸ் (Apex) என பெயரிடப்பட்ட 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த படிமம் 11 அடி உயரமும் 27 அடி அகலமும் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த டைனோசர் படிமம் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள மோரிசன் என்ற பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏலத்தில் விடப்பட்ட அபெக்ஸ் எனப்படும் டைனோசர் படிமம் 44.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அத்துடன், டைனோசர் மாதிரி ஏலத்தில் விடப்படுவது இதுவே முதல் முறையாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டில் விற்கப்பட்ட டைரனோசொரஸ் ரெக்ஸ் என பெயரிடப்பட்ட டைனோசர் புதை படிவத்திற்கான ஏல விலைக்கான சாதனையையும் அபெக்ஸ் (Apex) முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version