உலகம்

ஜேம்ஸ் எண்டர்சனுக்கு அவுஸ்திரேலியா வீரர் புகழாரம்

Published

on

ஜேம்ஸ் எண்டர்சனுக்கு அவுஸ்திரேலியா வீரர் புகழாரம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜேம்ஸ் எண்டர்சன் லோட்ஸ் மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுத்தார்.

2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான எண்டர்சன் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜேம்ஸ் எண்டர்சனுக்கு முன்னாள் அவுஸ்திரேலியா வீரர் இயான் சாப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளர் என்றால் அது எண்டர்சன்தான் என சுட்டிக்காட்டியுள்ளார்.

”நிறைய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் எண்டர்சன் அளவுக்கு பந்தை ஸ்விங் செய்வதில்லை.

பந்தை இரண்டு விதங்களிலும் (இன்ஸ்விங், அவுட்ஸ்விங்) ஸ்விங் செய்யும் அபார திறன் படைத்தவர் ஜேம்ஸ்.

பந்துவீச ஓடி வருகையில் பெரிய மாற்றமில்லாமலும் துடுப்பாட்ட வீரர்களால் யூகிக்க முடியாத அளவிலும் இரண்டு விதமான ஸ்விங் பந்துவீச்சை அவரால் வெளிப்படுத்த முடியும்.

ஏனைய பந்துவீச்சாளர்கள் எந்த விதமான ஸ்விங் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை துடுப்பாட்ட வீரர்கள் கண்டிபிடித்து விடுவார்கள்.

ஆனால், ஜேம்ஸின் பந்துவீச்சை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். எண்டர்சனின் இந்த திறன் அவரது மிகப் பெரிய பலமாகும்” என இயான் சாப்பல் கூறியுள்ளார்.

Exit mobile version