இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்(Gautam Gambhir) நியமிக்கப்பட்டுள்ளார்.

2024, 20க்கு 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பெருமையுடன் முன்னைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருந்து விடை பெற்றுள்ளார்.

இதனையடுத்து 2025 செம்பியன்ஸ் கிண்ணம், 2025 உலக டெஸ்ட் செம்பியன்சிப் ஆகிய முக்கிய தொடர்கள் இருக்கும் நிலையில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2007, 20க்கு 20 உலகக் கிண்ணம், 2011 ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம், 2012 மற்றும் 2014 ஐபிஎல் கிண்ண வெற்றி என கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

இந்தநிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக, அவர் நியமிக்கப்பட்டுள்ளமை, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் சா வெளியிட்டுள்ள பதிவில், கௌதம் கம்பீரை, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்தவராக இருப்பார் என்று தாம் நம்புவதாக ஜெய் சா தெரிவித்துள்ளார்.

Exit mobile version