உலகம்

கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

Published

on

கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு கோடை காலத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

குறைந்தபட்ச மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து பொருளியல் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சஸ்கட்ச்வான் மாகாணத்தில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 2 டொலர்களினால் அதிகரிக்கப்பட உள்ளது. கனடாவில் மிகவும் சம்பளம் குறைவான மாகாணமாக சஸ்கட்ச்வான் கருதப்படுகின்றது.

எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைக்கு மத்தியில் இந்த சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீட்டு வாடகை, மளிகைப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

குறைந்தபட்ச மணித்தியால சம்பள அதிகரிப்பு வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும் அதிகரிப்பு தொகை போதுமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவின் நுனாவட் பிராந்தியத்தில் அதிகூடிய மணித்தியால சம்பளமாக 19 டொலர் காணப்படுகின்றது.

ஒன்றாரியோ, மானிடோபா, பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகள் மற்றும் சஸ்கட்ச்வான் மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளது.

Exit mobile version