உலகம்

மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணி..ஆசிய நாட்டிற்கு வந்தடைந்த விளாடிமிர் புடின்

Published

on

மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணி..ஆசிய நாட்டிற்கு வந்தடைந்த விளாடிமிர் புடின்

பிராந்திய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கஜகஸ்தான் நாட்டிற்கு வந்தடைந்தார்.

பெய்ஜிங் தலைமையில் மத்திய ஆசியா, இந்தியா மற்றும் ஈரான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய முகாமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டம் கஜகஸ்தானில் நடைபெறுகிறது.

நேற்றைய தினம் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) இதில் பங்கேற்க வந்திருந்தார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவிற்கு வந்து சேர்ந்தார்.

மேற்கத்திய எதிர்ப்பு கூட்டணிகளை கடினப்படுத்தவும், மூலோபாய மத்திய ஆசிய பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை அழுத்தவும் இருநாட்டு தலைவர்களும் முயல்வதாக கூறப்படுகிறது.

மேலும் புடின் மற்றும் ஜி ஜின்பிங் இருவரும் SCOவை, Eurasia முழுவதும் தங்கள் மூலோபாய நலன்களை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய மன்றமாக பார்க்கின்றனர்.

புடின் வருகைக்கு முன்பாக, கிரெம்ளின் உதவியாளர் Yury Ushakov ரஷ்ய ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

”SCO என்பது BRICSயின் இரண்டாவது பாரிய சங்கம் என்று நாங்கள் நம்புகிறோம். இவை இரண்டும் புதிய உலக ஒழுங்கின் முக்கிய தூண்கள். இது உலக விவகாரங்களில் உண்மையான பன்முகத்தன்மையை நிறுவும் சூழலில் ஒரு Locomotive ஆகும்” என தெரிவித்தார்.

 

Exit mobile version