உலகம்

காஸாவில் பிஞ்சு சிறார்களில் பரவும் மிக ஆபத்தான தோல் வியாதி: எச்சரிக்கும் WHO

Published

on

காஸாவில் பிஞ்சு சிறார்களில் பரவும் மிக ஆபத்தான தோல் வியாதி: எச்சரிக்கும் WHO

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக பாலஸ்தீன பிராந்தியத்தில் மிக ஆபத்தான தோல் வியாதி பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், சுமார் 150,000 பேர்கள் பல்வேறு தோல் வியாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிரங்கு, சின்னம்மை, பேன், கொப்புளங்கள் ஏற்படும் ஒருவகை தோல் வியாதி மற்றும் பலவீனப்படுத்தும் சொறி வரை பரவுவதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

வெறும் தரையில் மண் மீது படுத்துறங்கும் நிலை இருப்பதால், இதுபோன்ற தோல் வியாதிகள் ஏற்படுவதாக பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். முன்பு போல தற்போது தங்கள் பிள்ளைகளை குளிப்பாட்ட முடியாமல் போயுள்ளது என்றும்,

தாங்கள் வசிக்கும் இடம் சுத்தமாக இல்லை என்றும் கழுவி சுத்தம் செய்யும் வகையில் எங்களுக்குச் சுகாதாரப் பொருட்களும் இல்லை என பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, மத்தியதரைக் கடலில் குளித்து சுத்தமாக இருக்க பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். கடலும் தற்போது கழிவுகளால் அசுத்தமாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், காஸா போர் தொடங்கிய பின்னர் சிரங்கு மற்றும் பேன் காரணமாக 96,417 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சின்னம்மையால் 9,274 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தோல் தடிப்புகளால் 60,130 பேர்களும் கொப்புளங்களால் 10,038 பேர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கரையோர பாலஸ்தீன பிரதேசத்தில் சிரங்கு மற்றும் சின்னம்மை நோய் வேகமாக பரவுகிறது என உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கிறார்.

முறையான உணவு, ஊட்டச்சத்து இன்றி அவதிப்படும் பிஞ்சு சிறார்கள் தற்போது தோல் வியாதிகளால் மோனமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலை தரும் விடயமாக உள்ளது என்றே MSF மருத்துவ ஒருங்கிணைப்பாளரான Mohammed Abu Mughaiseeb குறிப்பிடுகிறார்.

 

Exit mobile version