உலகம்

வரலாற்று சிறப்புமிக்க மசூதியில் 5 வெடிகுண்டுகளை கண்டெடுத்த UNESCO

Published

on

வரலாற்று சிறப்புமிக்க மசூதியில் 5 வெடிகுண்டுகளை கண்டெடுத்த UNESCO

ஈராக்கின் வடக்கு நகரான மொசூலில் உள்ள அல்-நூரி மசூதியில் இருந்து ஐந்து பாரிய வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

தீவிரவாத அமைப்பான ISIL (ISIS கிளை) இந்த குண்டுகளை சுவரில் புதைத்து வைத்துள்ளது.

Al Jazeera-வின் அறிக்கையின்படி, இந்த குண்டுகளின் எடை 1.5 கிலோ ஆகும்.

இவற்றில் ஒன்று சுவரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது, மீதமுள்ள குண்டுகளை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2017-ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட மசூதியை மீண்டும் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த UNESCO, பின்னர் கட்டப்பட்ட சுவரில் குண்டுகள் வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த தகவல் கிடைத்ததும் ஈராக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. வெடிகுண்டு அகற்றப்படும் வரை மக்கள் அனைவரும் மசூதி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜூலை 2014 இல், Islamic State தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி அல்-நூரி மசூதியைக் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து, ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஐஎஸ் அமைப்பு கைப்பற்றியது. அதே நேரத்தில், ISIL மசூதியில் வெடிகுண்டுகளை வைத்திருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, பின்னர் அவை வெடிக்கப்பட்டன.

2017-இல், ஈராக், அமெரிக்காவுடன் இணைந்து ISIL ஐ ஒழிப்பதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்தது. இந்த போரின் போது அல்-நூரி மசூதி அழிக்கப்பட்டது.

2020-இல் ISIL ஒழிக்கப்பட்ட பிறகு, ஈராக் இராணுவம் நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கையை நடத்தியது. ஆனால், இந்த வெடிகுண்டுகள் சுவரில் புதைக்கப்பட்டிருந்தது அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.

யுனெஸ்கோ ஐந்து குண்டுகளை ஜூலை 25 அன்று கண்டுபிடித்தது, ஆனால் அவற்றின் தகவல் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மசூதி, சாய்ந்திருக்கும் மினாரிற்காக உலகம் முழுவதும் அறியப்பட்டது. இந்த மசூதிக்கு சிரியாவை ஒருங்கிணைத்த Nour al-Din al-Zenkiயின் நினைவாக பெயரிடப்பட்டது. 1172-ம் ஆண்டு இந்த மசூதியைக் கட்ட உத்தரவிட்டது Nour al-Din al-Zenki தான்.

பின்னர், இந்த மசூதி பல போர்களின் போது பல முறை இலக்குக்கு உட்பட்டது. அதன் அசல் கட்டமைப்பின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது. இருப்பினும், அதன் கோபுரம் இன்னும் நிற்கிறது. பின்னர் இடிபாடுகளில் இருந்து 45,000 செங்கற்களை அகற்றி மசூதி மீண்டும் கட்டப்பட்டது. இது 2017- இல் ISIL அமைப்பால் மீண்டும் அழிக்கப்பட்டது.

2020-இல் ஐஎஸ்ஐஎல் கைப்பற்றப்பட்ட பின்னர், யுனெஸ்கோ அதை மீண்டும் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு நிதியுதவி செய்கிறது. பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகள் இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version