உலகம்

கனடா இடைத்தேர்தல்: ஆளும் ட்ரூடோ கட்சிக்கு தோல்வி

Published

on

கனடா இடைத்தேர்தல்: ஆளும் ட்ரூடோ கட்சிக்கு தோல்வி

கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ளது. இந்த இழப்பு ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

சமீபத்தில் ஐரோப்பாவில் நடந்து முடிந்த பல தேர்தல்கள், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதை தெளிவாகக் காட்டியுள்ளன.

அது பிரித்தானியாவானாலும் சரி, ஜேர்மனியானாலும் சரி, ஆளும் கட்சியினர் பின்னடைவையே சந்தித்துள்ளார்கள்.

கனடாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்றே தோன்றுகிறது, அங்கு நடந்த ஒரு இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது!

ஆம், செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St. Paul’s தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.

Don Stewartஇன் வெற்றி, லிபரல் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

காரணம், 30 ஆண்டுகளாக அத்தொகுதி லிபரல் வசம் இருந்த நிலையில், தற்போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் Toronto-St. Paul’s தொகுதியக் கைப்பற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version