உலகம்

ரஷ்யாவில் புடினை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி: வெளியான செய்தி

Published

on

ரஷ்யாவில் புடினை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி: வெளியான செய்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு சென்று ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் இந்திய தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இருதரப்பு சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

கோவிட் – 19 தொற்று காரணமாக 2020யில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை. மேலும், 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ரஷ்யா – இந்தியா வருடாந்திர உச்சிமாநாட்டை பிரதமர் மோடி ரத்து செய்தார்.

இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சூலை மாதம் ரஷ்யாவிற்கு பயணம் செய்து, ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்திப்பார் என இந்திய மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புடினின் உதவியாளர் யூரி உஷாகோவ் (Yury Ushakov), ”இந்தியப் பிரதமரின் வருகைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று TASS செய்தி நிறுவனத்திடம் பயணத்தின் குறிப்பிட்ட திகதிகளை வெளியிடாமல் கூறினார்.

அதேபோல், அரசு ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்ட ரஷ்ய அதிகாரிகள் கூட்டத்திற்கு தீவிரமாக தயாராகி வருவதாக தெரிவித்தனர்.

இருநாடுகளின் தலைவர்களின் சந்திப்பு மாஸ்கோவில் 8ஆம் திகதி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version